
மகேஸ்வரி தம்பி நடிக்கும் டைனோசர்
தற்போது இவரது தம்பி உதய் கார்த்திக் நடிக்கும் படம் "டைனோசர்". சாய் பிரியா நாயகியாக நடிக்கிறார். ஜோன்ஸ் வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார் போபோ சசி இசை அமைக்கிறார். கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் தயாரி க்கிறார். எம்.ஆர்.மாதவன் இயக்குகிறார். வருகிற 28ம் தேதி படம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் மாதவன் கூறும்போது “டைனோசர் என்பதை டை நோ சார்"" என்று பிரித்து பொருள் கொண்டால் "சாக வேண்டாம் சார்" என்று பொருள். அதுதான் இந்த படத்தின் கதை. அதாவது வன்முறை வேண்டாம் என்று சொல்கிற படம். வட சென்னை தாதாக்களை எதிர்த்து அகிம்சை வழியில் போராடும் ஹீரோ, எப்படி அதில் ஜெயிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!