ஆகஸ்ட்டில் திரைக்கு வரும் விமலின் ‛துடிக்கும் கரங்கள்
Advertisement
Advertisement
ஆகஸ்ட்டில் திரைக்கு வரும் விமலின் ‛துடிக்கும் கரங்கள்
ஜூலை 24, 2023
அ நிறம் | அளவு
Advertisement
‛காத்திருப்போர் பட்டியல்" பட இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‛துடிக்கும் கரங்கள்". மிஷா நரங், சதீஷ், சவுந்திரராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒடியன் டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தின் தயாரித்துள்ளனர். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். அதேசமயம் படத்தின் ரிலீஸ் தேதியை அவர்கள் வெளியிடவில்லை. முன்னதாக 1983ல் இதே பட தலைப்பில் ரஜினி நடிப்பில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!