
தயாரிப்பிலும் தடம் பதிப்பாரா தோனி ?
கிரிக்கெட் தவிர்த்து கால்பந்து கிளப் அணி, ஹாக்கி கிளப் அணி ஆகியவற்றில் இணை உரிமையாளராக உள்ளார். அடுத்து தோனி என்டர்டெயின்மென்ட் என்ற பொழுதுபோக்கு கம்பெனியை சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தார். அவரது முதல் தயாரிப்பாக அவரைப் பற்றிய "ரோர் ஆப் த லயன்" என்ற வெப் தொடரைத் தயாரித்தார். அடுத்து தமிழில் முழு நீளத் திரைப்படத்தைத் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கினார். தனது இரண்டாவது வீடு என சென்னையை மனதார நேசிக்கும் தோனி தனதுமுதல் படத் தயாரிப்பு தமிழில்தான் அமைய வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
அவரது தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் "எல்ஜிஎம்" படம் இந்த வாரம் ஜுலை 28ம் தேதி வெளியாக உள்ளது. தோனியின் முதல் தயாரிப்பாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் வெற்றிதான் அவர் அடுத்தடுத்து பல மொழிகளில் படங்களைத் தயாரிக்க உந்துதலாக இருக்கப் போகிறது. தோனியை நேசிக்கும் ரசிகர்கள் அவர் தயாரிக்கும் படத்தையும் நேசிப்பார்களா ?. இன்னும் சில தினங்களில் அதற்கான விடை கிடைத்துவிடும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!