
ப்ரோ - தெலுங்கில் பெயர் வாங்குவாரா சமுத்திரக்கனி?
24 மணி நேரத்தில் 19.25 மில்லியன் பார்வைகளைப் பெற்று பவன் கல்யாணின் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. இதற்கு முன்பு பவன் கல்யாண் நடித்து வெளிவந்த "வக்கீல் சாப்" திரைப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 18.05 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே அவரது சாதனையாக இருந்தது. அதை "ப்ரோ" டிரைலர் முறியடித்துள்ளது.
சமுத்திரக்கனி தெலுங்கில் நடிகராக வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், அவரது இயக்கத்தில் வெளிவந்த தெலுங்குப் படங்களான “சம்போ சிவ சம்போ, ஜன்ட பை கபிராஜு" ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. "நாடோடிகள்" படத்தின் தெலுங்கு ரீமேக் தான் "சம்போ சிவ சம்போ". "ஜன்ட பை கபிராஜு" படம் தமிழில் ஜெயம் ரவி நடித்த "நிமிர்ந்து நில்" படத்தின் ரீமேக்.
"ப்ரோ" டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து இப்படம் மூலம் தெலுங்கில் இயக்குனராக சமுத்திரக்கனி வெற்றி பெற்றுவிடுவார் என டோலிவுட் வட்டாரங்களில் இப்போது சொல்ல ஆரம்பித்துவிட்டார்களாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!