
கமல்ஹாசன் பட நிறுவனம் பெயரில் மோசடி: போலீசில் புகார்
அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சிலர் போலி விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இந்த விளம்பரத்தை நம்பி விண்ணப்பிக்கும் இளம்பெண்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கூகுள் பே மூலமாக பணத்தை அனுப்ப வேண்டுமென மணிகண்டன் என்பவர் சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார். இந்த மோசடியில் சிக்கி ஆகாஷ் என்ற நபர் 42 ஆயிரம் ரூபாய் இழந்த விபரம் எங்களுக்கு தெரியவந்ததால் இந்த புகாரை அளிக்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!