
தமிழில் ரீமேக் ஆகும் மலையாள ரிங் மாஸ்டர்
இதுகுறித்து மலையாளத்தில் அறிமுகமாகும் மால்வி மல்ஹோத்ரா கூறியதாவது: "ரிங் மாஸ்டர்" தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையற்றப் பெண்ணாக நடிப்பதற்காக, இதற்கு முன் பார்வையற்றவர்களாகப் பலர் நடித்த படங்களைப் பார்த்தேன். நாள் முழுவதும் கண்ணை மூடிக்கொண்டு வீட்டைச் சுற்றி நடந்து பயிற்சி செய்தேன். அதன் மூலம் பார்வையற்றவராக இருப்பது எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன். கண்களை மூடிக் கொண்டு பல் துலக்கினேன். இதுபோன்ற பயிற்சிகள், நடிக்கும்போது அதிக நம்பிக்கையைத் தருகிறது. இவ்வாறு மால்வி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நடித்த முதல் தமிழ் படம் "எல்லாம் அவன் செயல்". இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த "சிந்தமாணி கொல கேஸ்" என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ரீமேக் படத்தில் நடிக்கிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!