
விபத்து வழக்கு : யாஷிகா கோர்ட்டில் ஆஜர்
யாஷிகா ஆனந்த், வள்ளிசெட்டி பவானி மற்றும் நண்பர்கள் காரில் மாமல்லபுரம் சென்று விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற திரும்பும்போது அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் வரும்போது கார் திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவானி உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டாக நடைபெற்று வரும் இந்த வழக்கு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதி விசாரணைக்காக நேற்று யாஷிகா கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு மற்றும் யாஷிகா தரப்பு வழக்கிறஞர்கள் இறுதி வாக்குவாதம் செய்தனர். பின்னர் வழக்கை வருகிற செப்டம்பார் மாதம் 29ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் யாஷிகா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!