
லியோ வியாபாரம் : தமிழகம் மட்டுமே பென்டிங்
தற்போதைய நிலவரப்படி தமிழக வெளியீட்டு உரிமை வியாபாரம் மட்டுமே முடிவடையாமல் உள்ளதாம். தெலுங்கு டப்பிங் உரிமை, மற்ற தென்னிந்திய மாநில வெளியீட்டு உரிமை, வட இந்திய மாநில வெளியீட்டு உரிமை, வெளிநாட்டு வெளியீட்டு உரிமை, சாட்டிலைட் டிவி, ஓடிடி உரிமை ஆகியவை எதிர்பார்த்ததை விடவும் அதிக விலைக்கு விற்கப்பட்டு முடிவடைந்துவிட்டதாம்.
தமிழக உரிமையை அதிக விலைக்கு சொல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதனால்தான் தமிழக வியாபார உரிமை பற்றிய பேச்சு வார்த்தைகள் இழுத்துக் கொண்டு போவதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் அடுத்த ஓரிரு நாட்களில் அதற்கான முடிவும் எடுக்கப்பட்டுவிடும் எனத் தெரிகிறது. இந்த ஆண்டில் அடுத்து வெளிவர உள்ள படங்களில் "லியோ" படம்தான் அதிக விலைக்கு விற்கப்படும் படமாக இருக்கும் என கோலிவுட் சீனியர்கள் தெரிவிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!