
டபுள் விலைக்கு சொல்லப்படும் லியோ வியாபாரம்
இப்படத்திற்காகத் தயாரிப்பாளர் நிர்ணயித்திருக்கும் விலை, "வாரிசு" படத்தின் விலையை விட "டபுள்" மடங்காக இருக்கிறது என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. "வாரிசு" படமே பல ஏரியாக்களில் திருப்தியான வசூலை எட்டாமல் நஷ்டமடைந்ததாக சொல்லப்படும் நிலையில், "லியோ" படத்திற்கு இவ்வளவு விலையா என அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
லோகேஷின் முந்தைய படமான "விக்ரம்" படத்தின் வசூல், விஜய்யின் மார்க்கெட் நிலவரம், படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஆகியவற்றைச் சொல்லித்தான் தயாரிப்பாளர் தரப்பில் வியாபாரம் பேசுகிறார்களாம். "விக்ரம்" படத்தை விடவும் "லியோ" படம் அதிக வசூலிக்கும் என நம்பிக்கை தருகிறார்களாம். ஆனாலும், வினியோகஸ்தர்கள் தயங்கி வருவதாகத் தகவல். அதே சமயம் இப்படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட ரெட் ஜெயன்ட் நிறுவனமும் முயற்சித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
விஜய் அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்படும் நிலையில் "லியோ" படத்தின் வரவேற்பு, வெற்றி, வசூல் ஆகியவை விஜய்க்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!