
லியோ தெலுங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்
கேரளாவில் கோகுலம் பிலிம்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த நிலையில் தெலுங்கில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளன. இன்னும் தமிழக வெளியீட்டு உரிமை மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த படத்தை படத்தின் தயாரிப்பாளரே நேரடியாக வெளியிடுவாரா அல்லது ரெட் ஜெயண்ட் மூவிஸ், சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் வெளியிடுமா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!