
தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்!
கடந்த மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே ஜூலை மாதத்தில் டீசர் வெளியாகும் என்று அறிவித்தனர். இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஜூலை 28ல் சம்பவம் இருக்கு... கில்லர் கில்லர்" என பதிவிட்டு தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!