
கொலை மூலம் தமிழுக்கு வரும் மீனாட்சி சவுத்ரி
கொலை படத்தில் நடித்திருப்பது பற்றி மீனாட்சி சவுத்ரி கூறியதாவது: முதலில் இந்த கேரக்டரில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமானார். திடீரென்று அவர் விலகியதால் என்னை ஒப்பந்தம் செய்தனர். நான் பல் மருத்துவம் படித்தேன். ஆனால், எந்த மருத்துமனையிலும் பணியாற்றவில்லை. மாடலிங், சினிமா என்று பிசியாகி விட்டேன். நயன்தாரா, திரிஷாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் அவர்களைப் போல் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிப்பேன். தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன். தற்போது தீவிரமாக தமிழ் கற்று வருகிறேன். தற்போது "குண்டூர் காரம்" என்ற தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்து வருகிறேன். என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!