மறு வெளியீட்டில் 25வது நாளைத் தொட்ட வேட்டையாடு விளையாடு
ஜூலை 17, 2023
Advertisement
கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கமல்ஹாசன், ஜோதிகா மற்றும் பலர் நடிப்பில் 2006ல் வெளியான படம் "வேட்டையாடு விளையாடு". மாறுபட்ட கிரைம் திரில்லராக வெளிவந்த படம் அப்போது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தைத் தொழில்நுட்ப ரீதியாக 7.1 மற்றும் 4 கே டிஜிட்டல் என தரம் உயர்த்தி கடந்த மாதம் ஜுன் 23ம் தேதி வெளியிட்டார்கள். பழைய படமாக இருந்தாலும் டிஜிட்டல் தரத்தில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் விரும்பினார்கள். அதனால், படம் தற்போது 25வது நாளைத் தொட்டுள்ளது. இந்தக் காலத்தில் மறு வெளியீட்டில் ஒரு படம் 25 நாளைக் கடப்பது ஆச்சரியம்தான். புதிய படங்களே ஒரு வாரம் தாக்குப் பிடித்து ஒட முடியாத காலத்தில் ஒரு பழைய படம் 25 நாளைக் கடந்திருப்பதை திரையுலகினரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
அதனால், பழைய நல்ல படங்களை டிஜிட்டல் தரத்தில் உயர்த்தி மறு வெளியீடு செய்ய பலரும் தங்களது வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!