
ஆக்ஷன் படத்தில் நடிக்க நடிகை துஷாரா விஜயனுக்கு ஆசை!
படத்தின் ஹீரோயினாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர் கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பேசுகையில், ""எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும். அது போல தான் எனக்கும். தேசிய விருது பெற்ற வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்கிற ஆசை, தற்போது நிறைவேறி உள்ளது. அவருடைய அனைத்து படங்களிலும், ஏதேனும் ஒரு கருத்து சொல்லும் வகையில் தான் இருக்கும். என்னுடைய சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படமாக அமையும். இந்த படத்தில் "தனலட்சுமி" எனும் கதாப்பாத்திரத்தில், வெகுளித்தனமாக நடித்துள்ளேன். மக்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.
இதுவரை நான் நடித்த நடிகர்கள் அனைவரும் திறமைசாலிகள். அவர்களுடன் நடிக்கும் போது போட்டி, போட்டு அவர்களுக்கு இணையாக நடிப்பேன். என்னுடைய அடுத்த படத்திற்கு கதை கேட்டு வருகிறேன். இன்னும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவில்லை. வரும் நாட்களில் "ஆக்ஷன்" படங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்,"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!