
லியோ படப்பிடிப்பை நிறைவு செய்த லோகேஷ் கனகராஜ்
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் துவங்கியது. கிட்டத்தட்ட படத்தின் பாதி படப்பிடிப்பை அங்கேயே நடத்தினார் லோகேஷ் கனகராஜ். அதைத்தொடர்ந்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் மாறி மாறி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமீபத்தில் நடிகர் விஜய் இந்த படத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்தார்.
இந்த நிலையில் நேற்றுடன் லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆறு மாதங்களில் 125 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளதாக கூறியுள்ள லோகேஷ் கனகராஜ், தங்களது முழு மனதையும் இந்த படத்தில் செலுத்தி உழைத்த மொத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 19ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!