
ஆர்ஆர்ஆர் 2 - ராஜமவுலி இயக்கவில்லை?
ராஜமவுலி அடுத்து மகேஷ் பாபு நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க உள்ளார். அதற்கடுத்து "மகாபாரதம்" படத்தை ஆரம்பிக்கப் போகிறார். அது மூன்று பாகங்கள் கூட உருவாகலாம் என அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் விஜயேந்திர பிரசாத். அதனால், "ஆர்ஆர்ஆர்" படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா இயக்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள். "ஆர்ஆர்ஆர்" படத்தில் இரண்டாவது யூனிட் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார் கார்த்திகேயா. படத்தின் சில முக்கிய காட்சிகளை அவர் படமாக்கியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
"ஆர்ஆர்ஆர்" இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போதுதான் இயக்குனர் யார் என்பது தெரிய வரும். அதுவரை பலரது பெயர்கள் அதில் அடிபடலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!