
முகேன் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு
இந்த நிலையில் வேலன் படத்தை இயக்கிய கவின்ராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் முகேன். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை ஜி.மணிகண்டன் தயாரிக்கிறர். இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் "கோல்டன் ரெட்ரீவர்" வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடைபெறவுள்ளது. கிரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். அடுத்த வாரத்தில் படப்படிப்பை தொடங்கி, ஒரே கட்டமாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!