
‛குஷி-யால் சங்கடத்தில் சிக்கிய சமந்தா
காரணம் இந்த போஸ்டரில் ஒரு சோபாவில் சமந்தா அமர்ந்திருப்பது போலவும் இன்னொரு புறம் காலை நீட்டி படுத்துள்ள விஜய் தேவரகொண்டா ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கும் சமந்தாவின் கைமீது தனது கால் விரலால் தொடுவது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது. சமந்தாவை நெட்டிசன்கள் வறுத்து எடுப்பது இந்த போஸ்டரில் இப்படி ஒரு நிலையில் சமந்தா இருப்பதற்காக அல்ல..
பத்து ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ்பாபு நடித்த நம்பர் ஒன் நேனொக்கடினே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அதில் கதாநாயகியாக நடித்த கிரித்தி சனோன் கடற்கரையில் நடந்து செல்லும் மகேஷ் பாபுவின் பாதங்களை தவழ்ந்தபடியே பின் தொடர்ந்து செல்வது போல உருவாக்கப்பட்டிருந்தது. மிகவும் பிற்போக்குத்தனமாக இருப்பதாக அப்போது நடிகை சமந்தா இந்த போஸ்டருக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். அப்படி கூறியிருந்த சமந்தாவுக்கே இப்போது இப்படி ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளதே.. கர்மா இஸ் பூமராங் என, முன்பு அவர் கூறிய கருத்தையே மேற்கோள் காட்டி தற்போது நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!