
சீரியல் அப்பா கதாபாத்திரத்தில் விஜய் அப்பா எஸ்ஏ சந்திரசேகர்
அவர் இயக்கிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். கடந்த சில வருடங்களில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அவர் இயக்கி கதாநாயகனாகவும் நடித்த படம் "டிராபிக் ராமசாமி". மேலும், தனுஷ் நடித்த "கொடி", சிம்பு நடித்த "மாநாடு" ஆகிய படங்களில் அரசியல்வாதியாக அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு தற்போது டிவி சீரியல் பக்கம் போயிருக்கிறார். விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள "கிழக்கு வாசல்" என்ற சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்கான புரோமோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் விஜய்யின் அப்பா, டிவி சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதை திரையுலகினர் மட்டுமல்ல, ரசிகர்களும் வியப்புடன் பார்க்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!