சலார் 2000 கோடி வசூலிக்கும் : காமெடி நடிகர் கணிப்பு
ஜூலை 10, 2023
Advertisement
"கேஜிஎப்" கன்னடப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அவருடைய அடுத்த படமான "சலார்" படம் தெலுங்குப் படமாக எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தில் தெலுங்கு காமெடி நடிகரான சப்தகிரி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். படத்திற்கான டப்பிங் பணியை முடித்துவிட்டு டுவிட்டரில், “அதிகம் எதிர்பார்க்கப்படும் "சலார்" படத்தில் எனது கதாபாத்திரத்திற்கான டப்பிங்கை இன்று முடித்துள்ளேன். இப்படம் பிளாக் பஸ்டர் படமாக அமையும். பாக்ஸ் ஆபீசில் இப்படம் 2000 கோடி வசூலைக் கடக்கும் என உறுதியாக இருக்கிறேன். பான் வேர்ல்டு நடிகரான எங்களது பிரபாஸ், இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோருக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சப்தகிரியின் இந்த டுவீட்டிற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் அதை ரிடுவீட் செய்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!