
சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வெடுக்க உள்ளேன்: மீரா ஜாஸ்மின்
அடுத்ததாக நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகும் "டெஸ்ட்" படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இந்த படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் சசிகாந்த் இயக்குகிறார். சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் மீரா ஜாஸ்மின் அளித்த பேட்டியில், ""நான் ஏற்கனவே மாதவன், சித்தார்த் உடன் நடித்துள்ளேன். தமிழ்படம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்களை தயாரித்த சசிகாந்த் படத்தில் பங்கு பெற்றது மகிழ்ச்சி. நயன்தாராவுடன் நடிக்க ஆவலாக உள்ளேன்.
இதுவரை சிறப்பான பயணமாகவே இருந்து வந்துள்ளது. நடிகையாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சியானது. எனது தனிப்பட்ட வளர்ச்சி காரணமாக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருக்கலாம் என முடிவு செய்துள்ளேன். பின்னர் வந்து படங்களில் நடிக்கலாமென திட்டமிட்டுள்ளேன். நான் பதிவிடும் பயணம் தொடர்பான எனது சமூக வலைதள புகைப்படங்களுக்கு ரசிகர்களிடமிருந்து நேர்மையான கருத்துகள் வருகிறது. என்னை பின் தொடர்பவர்களுக்கு இதையெல்லாம் பகிர்வதற்கு சமூக வலைதளம் உதவிகரமாக இருந்தது"" எனக் கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!