
ஒவ்வொரு தொழிலாளியும் பார்க்க வேண்டிய படம் அநீதி: இயக்குநர் ஷங்கர்
இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசியதாவது: இயக்குநர் வசந்தபாலன் அநீதி படத்தை அருமையாக எடுத்துள்ளார். படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் நம்மை அழ வைக்கிறார். தனித்துவமாக நடித்துள்ளார். நடிகை துஷாரா விஜயனும் சிறப்பாக நடித்துள்ளார். காளி வெங்கட், வனிதா விஜயகுமார் உள்பட பலரும் நன்றாக நடித்துள்ளனர். இப்படத்தை ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளியும் பார்க்க வேண்டும். நமக்கு கீழ் வேலை செய்யும் மனிதர்களை எப்படி நடத்த வேண்டுமென கற்றுக்கொடுக்கும் சிறந்தபடமாக அநீதி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!