
மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி! சர்ப்ரைஸ் தகவல்கள் வெளியானது
இந்த நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதில் அரசியல்வாதிகளை பார்த்து பயந்த நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயன், அடிக்கடி வானத்தை பார்க்கிறார். அப்போது அங்கிருந்து ஒரு குரல் கேட்கிறது. அது யாருடைய குரல் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அது விஜய் சேதுபதியின் குரல் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரும்போது, அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த குரலை தற்போதைக்கு சஸ்பென்ஸாக வைத்துள்ளார்களாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!