
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பும் சரிதா!
இந்த நிலையில் சரிதா அளித்த ஒரு பேட்டியில், அடுத்தடுத்து சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தை பார்த்தேன். மிகச் சிறப்பாக அந்த படத்தை அவர் இருக்கி இருந்தார். அதையடுத்து அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அதோடு உங்களது இயக்கத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசையாக உள்ளது என்றும் தெரிவித்தேன். அப்போது அவர் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறியதோடு, என்னுடைய அம்மாவிற்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அவர் உங்களது ரசிகை என்று கூறினார் என அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகை சரிதா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!