
கேஜிஎப் 2 டீசர் சாதனையை முறியடிக்குமா சலார் டீசர் ?
"கேஜிஎப் 2" படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்து இயக்கியுள்ள "சலார்" படத்தில் பிரபாஸ் நடிப்பதால் அந்த டீசருக்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையை "சலார்" டீசர் பெற்றது. தற்போது 105 மில்லியன் பார்வைகளுடன் உள்ள அந்த டீசர் விரைவில் "ஆதிபுருஷ்" டீசரின் சாதனையான 109 மில்லியன் பார்வைகளைக் கடக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், "கேஜிஎப் 2" டீசரின் சாதனையான 271 மில்லியன் சாதனையைக் கடக்குமா என்பது கேள்வியாக உள்ளது.
"கேஜிஎப் 2" டீசர் 200 மில்லியன் பார்வைகளைக் கடக்க ஐந்து மாதங்கள் ஆனது. 2021 ஜனவரியில் வெளியான டீசர் ஜுலை மாதத்தில்தான் அந்த சாதனையைப் புரிந்தது. அதற்கு ஐந்து மாத கால அவகாசம் தேவைப்பட்டது.
பிரசாந்த் நீல், பிரபாஸ் கூட்டணியில் வரும் படம் என்பதாலும், இருவருமே இதற்கு முந்தைய அவர்களது படங்களின் டீசர்களில் சாதனை புரிந்தவர்கள் என்பதாலும் "சலார்" டீசரும் அந்த சாதனையைப் பெறும் என அவர்களது ரசிகர்கள் இன்னமும் எதிர்பார்க்கிறார்கள்.
"சலார்" படம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் விரைவில் "சலார்" டிரைலரும் வெளியாக உள்ளது என்கிறார்கள். அதனால், "கேஜிஎப் 2" டீசரின் சாதனையை முறியடிக்குமா என்பதும் சந்தேகம்தான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!