
அம்மா ஆனார் சனா கான்
கடந்த 2020ம் ஆண்டு முப்தி அனாஸ் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த சனா கான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்து, இனி மத பிரச்சாரம் செய்ய போவதாக கூறினார். பிரச்சாரம் செய்தும் வந்தார். கடந்த ஆண்டு தனது கணவருடன் மெக்கா புனித பயணம் சென்று வந்தார். இந்த நிலையில் சனா கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் சனாகானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!