
தனுஷின் 50வது படத்தில் இணைந்த காளிதாஸ் ஜெயராம்
அதை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். தற்போது இந்தியன்-2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் காளிதாஸ், அடுத்ததாக தனுஷின் ஐம்பதாவது படத்திலும் இடம் பிடித்துள்ளார். தனுஷ் தானே இயக்கி நடிக்கும் அவரது ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் இருந்தபடி பின்னணியில் தனுஷின் புதுப்பேட்டை பாடல் ஒலிக்கும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் காளிதாஸ் ஜெயராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!