கேப்டன் மில்லர் படப்பிடிப்பை முடித்த சந்தீப் கிஷன்
ஜூலை 04, 2023
Advertisement
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் "கேப்டன் மில்லர்". இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது. ராணுவ பின்னணியில் கதைக்களம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தீப் கிஷன் சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததாக அருண் மாதேஸ்வரன் போட்டோ உடன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு பின் தனுஷின் 50வது படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார் சந்தீப் கிஷன்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!