
நடிப்பிற்கு இடைவெளி விடுகிறாரா விஜய்?
இந்நிலையில் விஜய் அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள 2026ம் ஆண்டு வரையில் புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை என்று செய்திகள் காலையில் இருந்து பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது அவர் நடித்து வரும் "லியோ" படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அவருடைய 68வது படத்தில் ஓரிரு மாத இடைவெளியில் நடிக்கப் போகிறார் என்றும் இன்று வெளியான தகவல். இந்த 68வது படத்தை முடித்த பிறகு விஜய் வேறு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டார். அவரிடம் பேசிய சில தயாரிப்பாளர்களிடம் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார் என்று செய்திகள் பரவி வருகின்றன.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விஜய் ஒரு படத்தில் நடித்து முடிக்கும் சமயம்தான் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும். ஆனால், "லியோ" படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருடைய 68வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இவ்வளவு அவசரமாக விஜய் அறிவித்ததன் காரணம் அரசியல் நுழைவுதான் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
இப்படி ஒரு செய்தி வெளியான பிறகு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதற்கான ஆதரவுக் கருத்தையும், எதிர்ப்புக் கருத்தையும் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு தகவல் பரவுவதற்கு விஜய் தரப்பிலிருந்து ஏதாவது பதில் வருமா என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!