
கவுதம் மேனன் தான் கமல்ஹாசனின் ரசிக இயக்குனர் - லோகேஷ் கனகராஜ்
கமல்ஹாசன் நடித்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த "வேட்டையாடு விளையாடு" படம் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆகி தற்போது இரண்டாவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதைக் குறிப்பிட்டு கமல்ஹாசன் ரசிகர் ஒருவர், கமல்ஹாசனின் ரசிக இயக்குனர்களில் முதலிடத்தைப் பிடித்தது கவுதம் மேனன்தான், மன்னிக்கவும் லோகேஷ் கனகராஜ் ப்ரோ” என டுவிட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார்.
அந்த டுவிட்டருக்கு லோகேஷ் கனகராஜ், “டவுட்டே வேணாம் ப்ரோ, கவுதம் சார் தான்” என பதிலளித்துள்ளார். ஆனால், இயக்குனர் கவுதம் மேனன், “இருந்தேன்….நீங்கள் வரும் வரை, "நாயகன் மீண்டும் வரான்" வரும் வரை…விக்ரம்..நான் முயற்சி செய்து அதற்கு மேலும் உயர வேண்டும். இது ஒரு நல்ல சவாலாக இருக்கும் லோகேஷ்…ஆனா, இந்த சண்டையில சட்டை கிழியாது…வெறும் அன்பு மட்டுமே,” என லோகேஷுக்கு பதில் தெரிவித்துள்ளார்.
கவுதமின் பதிலுக்கு, “நிறைய அன்பும், மரியாதையும் உங்கள் மீது…இப்போது வரை "வேட்டையாடு விளையாடு" படத்தின் ரிரிலீசுக்குக் கிடைத்துள்ள வரவேற்பில் சிலிர்ப்பும், உற்சாகமும் கிடைக்கிறது. அதிகமான அன்பும், சக்தியும் நமது உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு, அன்பே சிவம்,” என லோகேஷ் நன்றி தெரிவித்து பதிலளித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!