
மாமன்னன் படத்தின் வெற்றிக்கு மாரி செல்வராஜ்க்கு கார் பரிசளித்த உதயநிதி!
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் உதயநிதி, மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் கார் ஒன்றை அன்பளிப்பாக அளித்து அவரை மகிழ்வித்துள்ளார். இதனை போட்டோ உடன் தனது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதி நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி வெளியிட்ட பதிவு: ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க "மாமன்னன்"-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ்க்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தற்போது இணையத்தில் இந்த போட்டோ உடன் செய்தியும் வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!