
ஜுலை 7ல் 7 படங்கள் வெளியீட்டு அறிவிப்பு
“பம்பர், இன்பினிட்டி, எப்போதும் ராஜா, காடப்புறா கலைக்குழு, சித்தரிக்கப்பட்டவை, லில்லி, வில்வித்தை” ஆகிய ஏழு படங்கள் வெளியாக உள்ளதாக இன்று வரையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்தப் படங்கள் வெளியாகும், எது தள்ளிப் போகும் என்பது அவை வெளியாகும் நாளன்றுதான் தெரிய வரும்.
"பம்பர்" படத்தில் வெற்றி, "இன்பினிட்டி" படத்தில் நட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார்கள். மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது இந்த இரண்டு படங்களில்தான் தெரிந்த முகங்கள் இருக்கிறார்கள். "காடப்புறா கலைக்குழு" படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மற்ற படங்களில் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் "மாமன்னன்" படம் மட்டுமே முக்கியமான படமாக வெளியானது. இந்த வாரத்தில் வேறு முக்கிய நடிகர்கள் படம் எதுவும் வராத காரணத்தால் இத்தனை சிறிய படங்கள் வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!