
கிரைம் திரில்லராக உருவாகும் விதார்த் படம்
ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை ஹைபர்லிங்க்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த சைபர் லிங்க் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை சகோ கணேசன் என்பவர் இயக்குகிறார்.
விதார்த் உடன் கலையரசன், சந்தோஷ் பிரதாப், தேஜூ அஸ்வினி, ஜான் விஜய், அதுல்யா சந்திரா, ஸ்வேதா தொரத்தி, ராதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஒயிட் ஹார்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜிஷ் அசோக் இசையமைக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!