
புராஜக்ட் கே - கமல்ஹாசனுக்கு இவ்வளவுதான் சம்பளமா?
கமல் ரசிகர்கள் ஒரு படி மேலே போய் "புராஜக்ட் கே" என்பதே கமல்ஹாசன் என்ற பெயரின் ஆங்கில முதல் எழுத்தான "கே" என்பதைத்தான் குறிக்கிறது என பதிவிட ஆரம்பித்தார்கள். ரஜினிக்குக் கூட இப்படி ஒரு சம்பளம் கிடையாது. "லால் சலாம்" படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்கும் அவருக்கு சில பல கோடிகள்தான் சம்பளம். ஆனால், கமல் 150 கோடி வாங்குகிறார் என்றெல்லாம் பெருமை பேசினார்கள்.
இந்தத் தகவல், செய்திகள் டோலிவுட்டினரை எரிச்சலடைய வைத்துள்ளது. இல்லையில்லை, கமல்ஹாசனுக்கு வெறும் 25 கோடிதான் சம்பளம், 100 கோடியோ, 150 கோடியே கிடையாது. பிரபாஸுக்கு மட்டும்தான் 150 கோடி சம்பளம் என்று தகவலைப் பரப்பி வருகிறார்கள். அமிதாப்புக்கே 10 கோடிதான் தருகிறார்கள், கமல்ஹாசன் அந்த சம்பளத்திற்கு நடிக்க மறுத்ததால் 25 கோடி வரை பேசி சம்மதிக்க வைத்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!