
எதிர்ப்புகளுக்குப் பணிந்த லியோ : எச்சரிக்கை வாசகங்கள் சேர்ப்பு
இதனிடையே, அந்தப் பாடலுக்காக விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்போது யு டியூபில் அந்தப் பாடல் வீடியோவில் "எச்சரிக்கை" வாசங்களைச் சேர்த்துள்ளார்கள். விஜய் சிகரெட் பிடிப்பது போன்று வரும் காட்சிகளில் "புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது போன்ற எச்சரிக்கை வாசகங்களை படத்தில்தான் சேர்க்கச் சொல்வார்கள். யு டியூப் வீடியோக்களுக்கு எந்தவிதமான தணிக்கையும் கிடையாது. இருந்தாலும் பாடலுக்கு எழுந்த எதிர்ப்புகளுக்குப் பணிந்து படக்குழு இப்போது இந்த வாசகங்களை சேர்த்துள்ளது.
ஆனாலும், குடிப்பது பற்றிய வரிகள் இருக்கும் “மில்லி உள்ள போனா கில்லி வெள்ல வருவான்" வரிகளிலோ மன்சூர் அலிகான் கையில் மதுக்கோப்பையை ஏந்தியிருக்கும் காட்சிகளிலோ, “குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்” என்ற "எச்சரிக்கை" வாசகங்களை சேர்க்கவில்லை. இப்படி சேர்க்காததற்கு எதிர்ப்பு வந்தால்தான் மீண்டும் சேர்ப்பார்கள் போலிருக்கிறது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!