
சர்ச்சைகளைக் கிளப்பாதீர் : நடிகை சுரேகா வாணி வேண்டுகோள்
தெலுங்கில் குணச்சித்திர நடிகையாக இருக்கும் சுரேகா வாணி அவரது மகள் மற்றும் சில நடிகைகள், கேபி சௌத்ரியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. தெலுங்கில் பல படங்களில் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வருபவர் சுரேகா வாணி. தமிழில் "விஸ்வாசம், மெர்சல், ஜில்லா, உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி" உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கேபி சௌத்ரி சர்ச்சையில் தனது பெயர் சிக்கியிருப்பது குறித்து சுரேகா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “சமீபத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகளால் எனது தொழில் எனது எதிர்காலம், எனது குடும்பம், எனது குழந்தைகளின் எதிர்காலம், உடல் நலம் அனைத்தும் பாதிக்கப்படும். தயவு செய்து எங்களைப் புரிந்து கொள்ளுங்கள், இந்த சர்ச்சையில் எங்களை இழுக்க வேண்டாம்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!