
புதிய படங்களை பின்னுக்குத் தள்ளிய வேட்டையாடு விளையாடு
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடித்து 2006ல் வெளிவந்த "வேட்டையாடு விளையாடு" படம் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 7.1 ஆடியோ, 4 கே டிஜிட்டல் வடிவில் நேற்று தியேட்டர்களில் வெளியானது. நேற்று வெளியான மற்ற படங்களைக் காட்டிலும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். சில புதிய படங்களை விடவும் இந்தப் படம் அதிக தியேட்டர்களில், காட்சிகளில் வெளியாகி உள்ளது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இன்றும் நாளையும் கூட குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இது போன்று ரசிகர்களைக் கவர்ந்த படங்கள் வரும் மாதங்களில் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் வாய்ப்பை இந்தப் படம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!