
குழந்தைகளுடன் விஜய் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய பூஜா ஹெக்டே
ஜூன் 23, 2023
Advertisement
நடிகர் விஜய் நேற்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையடுத்து தமிழகம் முழுக்க அவரது ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு வழங்குதல் என பல நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அதோடு வருங்கால முதல்வரே என்ற போஸ்டர் ஒட்டியும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தின் நான் ரெடி என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டு சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் இரண்டு குழந்தைகளுடன் புட்டபொம்மா என்ற பாடலுக்கு விஜய் மற்றும் பூஜாஹெக்டே, சதீஷ் ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். அது வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் பூஜா ஹெக்டே.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!