
மூன்றுகட்ட சோதனைக்குப்பின் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட மஞ்சு வாரியர்
இந்த நிலையில் தமிழில் மூன்றாவது படமாக மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார் மஞ்சு வாரியர். இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் சவாலான கதாபாத்திரம் ஒன்றில் கவுதம் கார்த்திக்கும் நடிக்கின்றனர். அனகா இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் எப்படி ஒப்புக்கொண்டார் என்பது பற்றி இயக்குனர் மனு ஆனந்த் சமீபத்தில் கூறும்போது, “தயாரிப்பாளரிடம் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மஞ்சு வாரியர் போன்ற ஒரு பவர்புல்லான நடிகை வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அவர் மஞ்சு வாரியரிடமே என்னை கதைசொல்ல அனுப்பி வைத்தார். முதலில் என்னிடம் கதை கேட்ட மஞ்சு வாரியர் அதன்பிறகு முழு திரைக்கதையுடன் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் ஒன்றரை மாதங்கள் எடுத்துக்கொண்டு திரைக்கதையை தயார் செய்து மீண்டும் அவரிடம் சென்று கூறினேன், அதை தொடர்ந்து வசனங்களுடன் கூடிய படத்தின் மொத்த ஸ்கிரிப்ட்டையும் தருமாறு கேட்டார். அதன்பிறகு அதைப் படித்துவிட்டு சில நாட்கள் கழித்து அவரே அழைத்து இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அவர் தனது படங்களை தேர்ந்தெடுக்கும் முறை என்னை ஆச்சரியப்படுத்தியது என்றாலும் அவரது தொடர் வெற்றிக்கு இதுபோன்று கதைகளை கவனித்து தேர்ந்தெடுக்கும் அந்த முயற்சி தான் அவருக்கு கை கொடுத்து வருகிறது என்பதும் புரிந்தது” என்று கூறியுள்ளார் இயக்குனர் மனு ஆனந்த்..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!