
தங்கலான் படத்திற்காக 5 மணி நேர மேக்அப் : மாளவிகா தகவல்
தற்போது இந்த படத்தில் நடிப்பதற்காக தனக்கு தினமும் 4 முதல் 5 மணி நேரம்வரை மேக் அப் போடப்படுவதாக படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார். மேக்அப் போடும்போது நான் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருப்பது பெரிய சவாலாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த படம் பீரியட் படம் என்பதால் சுமார் 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பெண்ணாக இதில் அவர் நடிக்கிறார். கருப்பு நிறம், அழுக்கான ஆடை, கனமான நகைகள் அணிந்து நடிக்கிறார். இந்த படம் என் கேரியரில் முக்கியமான படம். இதற்காக கடின உழைப்பை கொடுத்து வருகிறேன். என்று ஏற்கெனவே மாளவிகா கூறியுள்ளார். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு விக்ரம் காயம் அடைந்த தகவலையும் மாளவிகாதான் முதலில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!