
தாணு கம்பெனி பெயரை பயன்படுத்தி பண மோசடி
இதை கேட்டு அதர்ச்சி அடைந்த ஜெகதீசன் எங்கள் நிறுவனம் சார்பில் எந்த படத்திற்கும் நடிகர், நடிகை தேர்வு நடத்தவில்லை, இதற்காக எந்த விளம்பரமும் செய்யவில்லை என்றார். இதை தொடர்ந்து வந்தவர்களின் பணம் பெற்ற நபர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் ஜெகதீசன் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வி கிரியேஷன் பெயரில் போலியான விளம்பரம் செய்து இதுபோன்று பல நபர்களிடம் ஒரு கும்பல் பணமோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும், யாராவது எங்கள் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு பேசினால் தகவல் தெரிவிக்குமாறும் வி கிரியேஷன் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!