
தயாரிப்பாளர் சங்கத் தடை பட்டியலில் சிம்பு, விஷால் இல்லை?
இருந்தாலும் சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, அதர்வா, யோகிபாபு, ஆகியோர்தான் அவர்கள் என அதிகாரப்பூர்வமில்லாத ஒரு தகவல் பரவியது. ஆனால், அந்தப் பட்டியலில் சிம்பு, விஷால் ஆகியோரது பெயரை வேண்டுமென்றே சிலர் பரப்பியுள்ளதாகச் சொல்கிறார்கள். சிம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்த்த பிறகுதான் அவர் நடித்த "வெந்து தணிந்தது காடு, பத்து தல" ஆகிய படங்கள் வெளிவந்தன என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
பரபரப்புக்காகவும், தங்களைப் பற்றிய தவறான தகவல் வேண்டுமென்றே பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் யு டியுப் சேனல்களில் சிலர் இப்படி செய்கிறார்கள் என சம்பந்தப்பட்ட நடிகர்கள் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளார்களாம். தயாரிப்பாளர் சங்கத்தைப் பொறுத்தவரையில் அந்த நடிகர்கள் யார், யார் என்று வெளியிடாமல் இந்த விவகாரத்தை சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!