
தமிழுக்கு வந்த மலையாள வில்லன் ஜெய்ஸி ஜோஸ்
2013ம் ஆண்டு வெளியான "திரி டாட்ஸ்" படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமான ஜெய்ஸி ஜோஸ், தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து மலையாள சினிமாவின் முக்கியமான நடிகராக உயர்ந்தார். லூசிபர், காபா, நாயட்டு, ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற "2018", "கொரோனா பேப்பர்ஸ்" ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது சுந்தர்.சி நடிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் நாளை(ஜூன் 23) வெளியாக உள்ள "தலைநகரம் 2" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். சென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள படம். இதில் அவர் சுந்தர்.சிக்கு வில்லனாக நடித்துள்ளார். அதிலும் 3 கெட்அப்களில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் "ரெபல்" படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!