
புதுமுகங்களின் நேற்று நான் இன்று நீ
படம் பற்றி தயாரிப்பாளர் எச்.பாட்சா கூறியதாவது: குறுகிய கால அளவில் குறைந்த முதலீட்டில், நல்ல கதையையும் நடிக நடிகையர்களையும் நம்பி தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போடு இந்த படம் தயாராகிறது. சுவாரசியமான கதை களத்தோடு திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகிறது. அயல்நாட்டிலிருந்து தாய் மண்ணுக்கு வந்து தன் பூர்வீக சொத்தை மீட்க வந்த நாயகி எதிர்கொள்ளும் அமானுஷ்ய திகில் மர்மங்களையும், தெய்வ சக்தியையும் சொல்லும் மாறுபட்ட படம் இது. அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!