
லியோ படத்தின் நா ரெடி - நாலு வரியிலயே அரசியலா ?
இதனிடையே, புரோமோவில் உள்ள அந்த நான்கு வரிகளிலேயே அரசியல் கலந்த வரிகளாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நா ரெடி தா வரவா, அண்ணன் நா எறங்கி வரவா…
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா…
எவன் தடுத்து என் ரூட்டு மாறாதப்பா..
தெரண்டடிக்குற பறை அடிக்கணு, நா ஆட தான்..
வெரலடிக்குற தீ பந்தம் நா ஏத்த தான்..,” என வரிகள் உள்ளன.
“இறங்கி வரவா, சிங்கத்த சீண்டாதப்பா, தடுத்தாலும் ரூட்டு மாறாதப்பா, தீ பந்தம் நா ஏத்த தான்” ஆகிய வார்த்தைகளில் உள்ள அரசியல் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த வாரம் கல்வி உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விஜய் பேசியது, அவர் அரசியலில் இறங்குவாரா, மாட்டாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. "லியோ" படத்தின் இந்த முதல் சிங்கிளான "நா ரெடி" பாடலில் உள்ள அர்த்தம் அவர் விரைவில் அரசியலில் இறங்குவார் என்பதையே காட்டுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!