
ரகசிய திருமணம் செய்தேனா?: ரகுல் பிரித் சிங் விளக்கம்
இந்த நிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதனை மறுத்து ரகுல் பிரித் சிங் அளித்துள்ள பேட்டியில், ‛பிரபலமானவர்கள் தங்கள் காதலை மறைத்து வைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதனால்தான் நான் முன்னரே சொல்லிவிட்டேன். இப்போது எனது திருமணம் பற்றி நிறைய தகவல்கள் பரவுகின்றன. நான் ரகசிய திருமணம் செய்து கொண்டேன் என்று ஏற்கனவே வதந்திகள் வந்தன. சில மாத இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் எனக்கு திருமணம் நடந்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. அந்த வகையில், எனக்கு இரண்டு முறை திருமணம் செய்து விட்டார்கள்" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!