
மாமன்னன் இயக்குனர் மாரிசெல்வராஜை எதிர்க்கும் கமல் ரசிகர்கள்
மற்றுமொரு பேச்சின் போது அவர் கமல்ஹாசன், கவுதமி நடித்து வெளிவந்த "பாபநாசம்" படம் பற்றியும் பேசியிருந்தார். கமல்ஹாசனின் இரண்டு படங்கள் பற்றி மாரி செல்வராஜ் விமர்சித்துப் பேசியதைக் குறித்து பல கமல்ஹாசன் ரசிகர்கள் இன்று சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள். இரண்டு படங்களைப் பற்றிய புரிதலும் அவருக்கில்லை என்றும், மாரி செல்வராஜ் கூட அவரது படங்களில் குறிப்பிட்ட சாதியைப் பற்றித்தான் மையப்படுத்தி படமெடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
"தேவர் மகன்" படத்தில் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரமான "இசக்கி" கதாபாத்திரம்தான் "மாமன்னன்" படம் உருவாகக் காரணம் என்றும் மாரி செல்வராஜ் பேசியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ள "மாமன்னன்" படம் அடுத்த வாரம் ஜுன் 29ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளிவந்த பின் அப்படத்தைப் பற்றி கமல்ஹாசன் கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!