
படப்பிடிப்புக்கு சுமைகளுடன் மலையில் நடந்த சுனைனா
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கேரளாவில் உள்ள தொடுபுழாவை மலைப்பகுதிகளில் நடந்தது. அங்கு வாகனங்கள் செல்ல முடியாததால் மொத்த படக்குழுவும் படப்பிடிப்பு தளத்தை அடைய சில மைல் தூரம் நடக்கவேண்டி இருந்தது. நடிகை சுனைனாவும் தான் கொண்டுவந்த பொருட்களை தூக்கிக்கொண்டு படக்குழுவினருடன் சேர்ந்து நடந்தே சென்றார். இப்படி பல நாட்கள் படமாக்கப்பட்டது.
“நடிகை சுனைனாவிடம் இருக்கும் பண்புகளில் முக்கியமானதே அவர் கதையையும் கதாபாத்திரங்களையும் சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பது தான். அதுமட்டுமல்ல, அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அவரது சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு பாராட்டுகளையும் வென்று தந்திருக்கின்றன. அவரது அற்புதமான நடிப்பையும் தாண்டி, படப்பிடிப்பில் அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குறியது” என்கிறார் தயாரிப்பாளர் சதீஷ் நாயர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!