
ஏஞ்சலால் மாமன்னனுக்கு வந்த சிக்கல்
இந்நிலையில் மாமன்னன் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்திற்கு தடை கோரி மனு சென்னை ஐகோர்ட்டில் ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் கேஎஸ் அதியமான் இயக்கத்தில் உதயநிதி, பாயல் ராஜ்புட், ஆனந்தி, யோகி பாபு நடிக்க ‛ஏஞ்சல்" என்ற படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டு 80 சதவீதம் படப்பிடப்பு முடிந்துள்ளது. இன்னும் 20 சதவீதம் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளது. ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார் உதயநிதி. இதுதான் தனது கடைசி படம் என்றும் கூறியுள்ளார். இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை ரூ.13 கோடி செலவாகி உள்ளது. இந்த படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் எனக்கு இழப்பு ஏற்படும். ஆகவே மீதமுள்ள படப்பிடிப்பை உதயநிதி முடித்து தர வேண்டும். ரூ.25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு தனது மனுவில் கூறி உள்ளார்.
இதனால் மாமன்னன் படத்திற்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!