
சலார் டீசர் எப்போது
ஜூன் 19, 2023
Advertisement
யஷ் நடித்த கேஜிஎப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ், ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆக்சன் கலந்த த்ரில்லர் கதையில் உருவாகி வரும் இப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்தது. மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இந்த நிலையில் சலார் படத்தின் டீசர் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருப்பதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி இருக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!